கமலா வாசுகியின் ஓவியங்களின் காட்சி

கமலா வாசுகி (வாசுகி ஜெயசங்கர் – 1966) யாழ்ப்பாணத்தில் பிறந்து, மட்டக்களப்பில் வாழ்ந்துவரும் பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளரும் ஓவியரும் ஆவார். இலங்கையின் பெண்கள் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் வலையமைப்புக்களில் தீவிரமாக இயங்கிவரும் இவர் இலங்கையின் முரண்பாடுகள் மற்றும் இயற்கை அனர்த்தப்பகுதிகளில் பெண்களது உரிமைகளுக்காக செயற்பட்டு வருபவர்.

1988 இலிருந்து தனது ஓவியங்களை மற்றும் கலையாக்கங்களை காட்சிப்படுத்தலுக்கு கொண்டுவரும் கமலாவாசுகி, தனியாள் ஓவிய காட்சிப்படுத்தலை 1989 இல் நிகழ்த்தியிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த பிரஞ்சு நட்புறவுக் கழகம் இக்கண்காட்சியை ஒழுங்கமைத்திருந்தது. இவர் இலங்கையின் பல்வேறு ஓவியக்கூடங்களிலும், பொது இடங்களிலும் தனது ஓவியங்களையும் ஏனைய கலையாக்கங்களையும் தொடர்;ச்சியாகக் காட்சிப்படுத்தி வருகிறார். கமலா வாசுகியின் ஓவியங்கள் மற்றும் கலையாக்கங்கள் மனித உரிமை சார்ந்த சர்வதேச மாநாடுகள் மற்றும் சந்திப்புக்களிலும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

ஓவியர் என்ற வகையில் பால்நிலை மற்றும் சமூகநீதிக்கான விடயங்களில் ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் கலைவெளிப்பாடுகளை நிகழ்த்தி வருபவர். தனியாள் வெளிப்பாடாக மட்டும் இல்லாமல் போராலும், வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து ஓவிய ஆக்கச் செயற்பாடுகளை முன்னெடுப்பதும் அவரது கலைச்செயல்வாதமாக இருந்து வருகிறது.
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞானப் பட்டம் பெற்று பின்னர் அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் மற்றும் சனநாயகமயமாக்கம் பாடநெறியில் முதுகலைமானி பட்டம் பெற்றுள்ளார்.
பெண்கள் உரிமைகளுக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பெண்நிலைவாத அமைப்புக்களுடன் இணைந்து இயங்கி வரும் வாசுகி, மனித உரிமைகளை வலுப்படுத்தும் செயற்றிட்டங்களில் யுனிசெவ், கெயார் சர்வதேசம் மற்றும் அக்சன் எய்ட் போன்ற நிறுவனங்களிலும் பணிபுரிந்துள்ளார்.

ஜப்பான் – சிறிலங்கா நட்புறவுச்சங்கம் வழங்கும் புங்கா விருதினை ((Bunka Award) ) 2001 இல் பெற்றுக்கொண்டார்.

ஓவியக்காட்சிப்படுத்தல்கள்:
2020 பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம், வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள், கல்லடிப்பாலம், திறந்தவெளிக்காண்பியக் காட்சி, மட்டக்களப்பு, இலங்கை
2019 பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம், ஓவியக்கூடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், இலங்கை,
2018 பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம், வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள், கிழக்குப்பல்கலைக்கழகம், மட்டக்களப்பு, இலங்கை
2018 பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம், வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள், கிளிநொச்சி, இலங்கை.
2018 பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம், வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள், கல்லடிப்பாலம், திறந்தவெளிக்காண்பியக் காட்சி, சத்துருக்கொண்டான், மட்டக்களப்பு, இலங்கை
2017 பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம், வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள், தான்டவன்வெளி, மட்டக்களப்பு, இலங்கை.
2017 பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம், வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு, இலங்கை,
2017 பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம், வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள், முல்லைத்தீவு, இலங்கை.
2016 தனியாள் கண்காட்சி, சமூக நீதிக்கான நிறுவகம், அவுஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், சிட்னி, அவுஸ்திரேலியா
2011 தனியாள் கண்காட்சி, காட்மண்டு சட்டத்துறைக்கான கல்வியகம், நேபாளம்.
2010 தனியாள் கண்காட்சி, கலை மற்றும் சமூகவிஞ்ஞானங்கள் துறை, சிட்னி பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியா.
2007 வாழ்கின்றவெளி, மூன்றாவது கண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழு, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, மட்டக்களப்பு, இலங்கை.
2004 கோடுகள், வெளி, வாழ்க்கை, திரிகோன் கலை மையம், ஹரோல்ட் பீரிஸ் கலைக்கூடம், கொழும்பு, இலங்கை.
2002 வண்ணங்களில் வாழ்வெழுதி, தனியாள் கண்காட்சி, மகாஜனாக்கல்லூரி, மட்டக்களப்பு.
2002 பெண்களும் சமாதானமும், இனத்துவத்துக் கற்கைகளுக்குமு; சமாதானத்துக்குமாக மையம், பெயார் வூற் ((Barefoot) ) கலைக்கூடம்
2001 இனவித்தியாசங்களைக் கொண்டாடுதல், பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு லயனல்வென்ட் ஓவியக்கூடம், கொழும்பு, இலங்கை.
.1999 வடகிழக்கின் ஐந்து ஓவியர்களின் காட்சிப்படுத்தல், வெஸ்லிக் கல்லூரி, கல்முனை, இலங்கை.
1999 ஹேக் சமாதானத்துக்கான வேண்டுகோள் மாநாடு, ஒல்லாந்து,.
1998 தனியாள் காட்சிப்படுத்தல், வண்ணங்களில் உணர்வெழுதி, சாள்ர்ஸ் மண்டபம், மட்டக்களப்பு. இலங்கை.
1998 வடகிழக்கு ஒவியர்களின் காட்சிப்படுத்தல், வடகிழக்கு மாகாணசபை, திருகோணமலை, இலங்கை.
1998 பெண்களின் படைப்பாற்றல்களைக் கொண்டாடுதல், அரச்சார்பற்ற பெண்கள் நிறுவனங்களின் கூட்டமைப்பு, தேசியக் கலைக்கூடம், கொழும்பு, இலங்கை.
1997 பங்கேற்பாளர் சர்வதேச கலைஞர்கள் முகாம் (கந்தளம) மற்றும் காட்சிப்படுத்தல், , தேசிய கலைக்கூடம், கொழும்பு. இலங்கை.
1991 சமகால இளம் ஓவியர்களின் கண்காட்சி, ஜோர்ஜ் கீற் மன்றம், கொழும்பு, இலங்கை.
1989 தனியாள் காட்சிப்படுத்தல், பிரெஞ்ச் நட்புறவுக் கழகம், யாழ்ப்பாணம். இலங்கை.
1988 பெண் ஓவியர்களின் காட்சிப்படுத்தல், பெண்கள் ஆய்வு வட்டம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமஇ யாழ்ப்பாணம் இலங்கை.

 

நூல்கள்
A – Z of conflict, பத்து சமகால மும்மொழி ஓவியர்களின் ஆக்கங்களின் தொகுப்பு, Raking Leaves,

2016 நம்பிக்கையின் வாக்குமூலம், கவிதைகளும் ஓவயங்களும் தொகுப்பு, சிறகுநுனி, மட்டக்களப்பு

2006 பூச்சிகள் பறவைகள் விலங்குகளுடன் வாழ்வோம், சிறுவர்களுக்கான கோட்டோவிய கவிதைப் புத்தகம்.
……. கட்டுக்களை அவிழ்த்தல்

1998 வர்ணங்களில் உணர்வெழுதி, ஓவியப்பரதிகளின் தொகுப்பு