துறைநீலாவணையில் சரவணமுத்து ஞாபகார்த்த கூடைப்பந்து மைதானத் திறப்பு விழா நிகழ்வு

இ.சுதாகரன்

சரவணமுத்து ஞாபகார்த்த கூடைப்பந்து மைதானத் திறப்பு விழா நிகழ்வு 18 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் சிரேஸ்ட எழுத்தாளர் உமா வரதராஜன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக  இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் மற்றும் மட்டு மாவட்ட செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் எஸ்.நேசராசா, Slido சிரேஸ்ட ஆலோசகர் இரா.ருசாந்தன்,கிழக்கு மாகாண மதுவரித்திணைக்கள உதவி ஆணையாளர் எஸ்.தங்ராசா, கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்.ரீ.ஜேக்கப்  அதிசயராஜ், தேசிய கல்வி நிறுவக தமிழ்துறைப் பிரிவு ஓய்வு நிலைப்பணிப்பாளர் செல்வி விஜயலெட்சுமி வைரமுத்து,களுதாவளை பிரதேச சபையின் செயலாளர் அ.சாரங்கபாணி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,பொது மக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது இரசாயணவியல் து றைப் பேராசிரியர் எஸ்.அரசரெத்தினம் மற்றும் பொத்துவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.இராமக்குட்டி ஆகியோர் கெளரவத்தினைப் பெற்றுக் கொண்டனர்.இதன் போது அதிதிகளின் கரங்களினால் கூடைப்பந்து மைதானம் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.