அக்கரைப்பற்று, ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய அறுவடை பொங்கல் விழா

(ம.கிரிசாந்)

அக்கரைப்பற்று, ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய அறுவடை பொங்கல் விழா நிகழ்வு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய பரிபாலனசபையினர் தலையில் இன்று (17) காலை 10.00 மணியளவில் புளியம்பத்தை விளாவடி வயல் பகுதியில் சிறந்த முறையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வின் அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு.வி.பாபாகரன் அவர்கள் கலந்துகொண்டதுடன் கலாச்சார உத்தியோகத்தர், கிராம சேவகர் மற்றும் ஊர் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் ஆலய குருக்கள் ஜெகரூபன் ஐயா மற்றும் யோகானந்தன் ஐயா அவர்கள் பூஜை நிகழ்வுகளை முன்னெடுத்ததுடன் ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய பரிபாலனசபையின் தலைவர் பி.பிரசாந்த், செயலாளர் யோகநாயகம் , பொருளாளர் பிரதீபன் அவர்களின் தலைமையிலும் அறுவடை பொங்கல் விழா இடம்பெற்றது.