(ஏ.எல்.எம்.ஷினாஸ்)மருதமுனை ‘மாஸ்’ சமூக அமைப்பு ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர் களுடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அணி தெரிவாகியுள்ளது.
அணிக்கு ஏழு பேர் கொண்ட ஐந்து ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி யாக கடந்த மார்ச் மாதம் (11) ஆரம்பிக்கப்பட்டு ‘ஏ’, ‘பி’ ஆகிய இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வரும் இச் சுற்றுப் போட்டியின் ‘பி’ குழு அணிகளுக்கு இடையிலான போட்டியும் இறுதிப் போட்டி பரிசளிப்பு நிகழ்வு என்பனவும் நாளை (18) மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.மாவட்டத்தின் பல அலுவலகங்களில் இருந்தும் 20 அணிகள் பங்குபற்றும் இச் சுற்றுப் போட்டியின் ‘ஏ’ குழுக்களுக்கான போட்டி நடைபெற்று முடிவடைந்திருக்கும் நிலையில் அதன் அரை இறுதிப் போட்டி அல்பா ஹெல்த் சேர்விஸ் நிறுவனம் மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலை அணிகளுக்கிடையில் நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த அரையிறுதி போட்டியில் வைத்தியசாலை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவானது. பி பிரிவு போட்டிகள் நாளை (18) நடைபெறவுள்ளது இப்போட்டியில் வெற்றி வரும் அணியுடன் ஆதார வைத்தியசாலை அணி இறுதிப் போட்டியில்விளையாடவுள்ளது.
அலுவலகங்களுக்கிடையில் இன நல்லிணக்கம், ஒற்றுமை, உடல் ஆரோக்கியம் என்பனவற்றை கருத்தில் கொண்டு இச் சுற்றுப் போட்டி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சுற்றுப் போட்டிக்கு சரோ பார்ம் பிரைவேட் லிமிடெட் , அல்பா ஹெல்த் சேவிஸ் பிரைவேட் லிமிடெட், மூன் விலேஜ் & ரெஸ்ரோரன்ட் , 4ஜி ஹேன்லூம், முஹம்மட் மென்ஸ் வேயா, ஆபிதா ரைஸ் சோப், இஹாப் சுவீட்ஸ் எனப அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.