காரைதீவில் விவசாயிகளுக்கு இலவச டீசல் விநியோகம்!

( வி.ரி.சகாதேவராஜா)
கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச விவசாயிகளுக்கு இலவசமாக டீசல் விநியோகம்  இன்று(17) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
 சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கிய இலவச டீசல் நேற்று வழங்கப்பட்டது.
 காரைதீவு கமநல சேவை பிரதேசத்துக்குட்பட்ட 118 விவசாயிகளுக்கு 1271 லிட்டர் டீசல் விநியோகிக்கப்பட்டது.
 மாவடிப்பள்ளி அமிரலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மா. சிதம்பரநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு இவற்றை வழங்கி வைத்தார்கள்.