மன்னார் அரச ஓய்வூதியம் பெறுவோரின் சங்கத்தின் நடப்பு வருட புதிய நிர்வாகிகள்.

(வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்டத்தின் அரச ஓய்வூதியம் பெறுவோரின் சங்கத்தின் 35 வது வருடாந்த பொதுக்கூட்டம் வியாழக்கிழமை (16) மன்னார் நகர சபை மண்டபத்தில் இதன் தலைவர் எஸ்.சூசைதாசன் தலைமையில் இடம்பெற்றது.

இவ்கூட்டத்தின்போது இவ்சங்கத்தின் நடப்பு வருட புதிய நிர்வாகிகள் தெரிவு இடம்பெற்றது.
தலைவராக எஸ்.சூசைதாசன் , உப தலைவராக எல்.ஸ்ரீபன் குரூஸ் . செயலாளராக எஸ்.எம்.அன்ரனி குரூஸ் , உப செயலாளராக ஏ.ஏ.சி.அன்ரன் குரூஸ். , பொருளாளராக ஏ.பிரான்சிஸ் அவர்களும்
மேலும் இவ் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டவர்களில் மன்னாருக்கு கே.பாலசந்திரன் , எஸ்.பி.ஜெயக்குமார் , திருமதி ஜீவாநந்தம்நானாட்டான் பிரிவுக்கு எஸ்.ஏ.குணசீலன் . திருமதி மோனிங்ஸ்ரார்.
முசலி பிரிவுக்கு எஸ்.செபஸ்தியார்.
மடு பிரிவுக்கு திரு.முத்துராஜா
மாந்தை மேற்கு பிரிவுக்கு திருமதி மதியாபரன் புஸ்பராணி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.