நெதர்லாந்து நாட்டு அமரர் திரு கிறீற் டிவுஸ் ஒதுக்கிய கல்விக்கான நிதி வழங்கப்பட்டது.

( வாஸ் கூஞ்ஞ) நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அமரர் திரு கிறீற் டிவுஸ் கடந்த வருடம் (2022) அமரத்துவம் அடைந்துள்ளபோதும் அவர் இறக்குமுன் வறுமை கோட்டுக்குள் வாழும் மன்னார் மாவட்ட மாணவர்களுக்கு கல்விக்காக மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஊடாக வழங்கப்பட்ட நிதியில் இவ்வருடத்தின் முதலாம் தவணைக்கான கல்விக்கான கொடுப்பனவு இவ்மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

புதன்கிழமை (15) மன்னார் மாவட்ட துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தில் வைத்து 39 மாணவர்களுக்கு இவ்நிதி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த கல்விக்கான கொடுப்பனவு தரம் 4 லிருந்து உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இவ்கல்வி கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்நிதியானது 2000 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இன்றுவரை வழங்கப்பட்டு வருவதாகவும் அமரர் திரு கிறீற் டிவுஸ் இறந்துள்ளபோதும் அவர் ஏற்கனவே இவ் மாணவர்களுக்கான கல்விக்கான நிதி ஒதுக்கியுள்ளதால் இது தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு கொடுக்கக்கூடியதாக இருக்கும் எனவும் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கம் வட்டாரம் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.