சமய சக வாழ்வுக்கான பரிந்துரை செயல்பாடு அமர்வு.

(வாஸ் கூஞ்ஞ)  சமய சக வாழ்வுக்கான தேசிய சமாதான பேரவையும் தொடர்பாடலுக்கான பயிற்சி மையமும உள்ளுராட்சி மன்றங்களுக்கான தொடர்பால் உள்ளவர்களுடன் பரிந்துரை செயல்பாடு அமர்வு ஒன்றை மன்னார்pல் நடாத்தினர்.

தொடர்பாடலுக்கான பயிற்சி மையமும் தேசிய சமாதான பேரவைக்குமான செயல் திட்ட மன்னார் மாவட்டத்துக்கான இணைப்பாளர் யசோதரன் தலைமையில் மன்னார் ஆகாஷ் ஹொட்டலில் புதன்கிழமை (15) காலை தொடக்கம் பிற்பகல் வரை இவ் அமர்வு இடம்பெற்றது.

இந்த செயல் அமர்வுக்காக கட்சிகளின் முகவர்களுக்கூடாக தெரிவு செய்யப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் எதிர்வரும் இவ்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் இவ்அமர்வில் கலந்து கொண்டதுடன் சர்வமதத் தலைவர்கள் உட்பட மன்னார் தேசிய சமாதான பேரவைக்குமான உறுப்பினர்களும் இவ் அமர்வில் கலந்து கொண்டனர்.

அத்துடன் இதன் வளவாளராக இலங்கை தேசிய சமாதான பேரவையின் சிரேஷ்ட நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் எம்.உவைஸ் கலந்து கொண்டார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒன்று இடம்பெறுமாகில் பிரச்சாரத்தின்போது மதங்கள் இனங்களை முன்வைத்து பிரசாரம் செய்து சமாதானத்துக்கு குந்தகம் விளைவிக்காது செயல்படுமாறும்

தங்கள் சுயநலத்துக்கு முன்னுரிமைபடுத்தாது மக்கள் நலன்நோக்கி செயல்படும் தன்மையில் ஒவ்வொருவரும் திகழ வேண்டும் என்ற கருத்துக்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இவ் அமர்வு இடம்பெற்றது.