கடன் வழங்குனர்களுக்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்கள் மற்றும் Paris Club கடன் வழங்குநர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் வேலைத்திட்டத்திற்கு தேவையான ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்க வேண்டும் என அக்கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் நிலைமை தொடர்பில் வெளிப்படையான முறையில் தேவையான தகவல்களை உரிய தரப்பினருக்கு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.