ஓட்டமாவடியில் முதியோருக்கான மருத்துவ முகாம்.

முதியோருக்கான நடமாடும் மருத்துவ முகாமும் கண்சிகிச்சையும் ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

கெல்ப்பேஜ் நிறுவனத்தின் (HelpAge Sri Lanka) அனுசரனையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் மற்றும் கெல்ப்பேஜ் நிறுவனத்தின் வைத்தியர் குழு உள்ளிட்டோர் கலந்து கொண்டு வைத்திய முகாமை நடாத்தினர்.

இதன்மூலம் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அதிகளவான பொதுமக்கள் மருத்துவ பரிசோதணைகள் மேற்கொண்டு பயன்பெற்றனர்.

இங்கு கருத்து வெளியிட்ட சமுக சேவை உத்தியோகத்தர் எம்.ஏ.சி.நஜமுதீன், கண் பரிசோதணை மூலம் இனங்காணப்பட்ட பார்வை குறைபாடுடையோருக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் முதியோருக்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் பிரதேச செயலாளரின்  வழிகாட்டலில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.