அரசாங்கம் பயப்படுவதை போன்று முஸ்லிம் தலைமைகளும் தேர்தலுக்கு பயப்படுகிறார்கள் – இம்ரான் மகரூப் எம் பி

ஹஸ்பர்

தற்போது தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என சந்தேகம் காணப்படுவதாகவும் ஆளுங் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கின்மை காரணமாக தேர்தலை நடாத்த அச்சப்படுவதாகவும் தேர்தலை நடாத்த அரசாங்கம் பயப்படுவதை போன்று முஸ்லிம் தலைமைகளும் தேர்தலுக்கு பயப்படுவதாக வெள்ளிக்கிழமை (17) கிண்ணியா அண்ணல் நகர் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

மக்கள் மத்தியில் வர முடியாக ஆளும்கட்சியினர் ஆரம்பத்தில் அதிகாரிகளை அச்சமூட்டி தேர்தலை பிற்போட முயற்சித்தார்கள் தற்போது பெற்றோல், மின் கட்டணங்கள், பொருட்களின் விலைகளை அதிகரித்து மக்களை அச்சமூட்டி தேர்தலை பிற்போட முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும், நமது நாடு பொருளாதார சிக்கலில் இருப்பதற்கு பிரதான காரணம் ராஜபக்ஸவினரும் அவர்கள் அவர்களுடைய அதிகாரத்தை வைத்து செய்த செயற்பாடுகளும்தான் எனவும், 69 இலட்சம் மக்கள் வாக்களித்து வழங்காத அதிகாரத்தை 20 ம் திருத்தத்திற்கு ஆதரவளித்து சில முஸ்லிம் தலைமைகள் வழங்கியதாகவும் இந்த தேர்தல் மூலம் 20 க்கு வாக்களிந்தவர்களுக்கு மக்கள் பாடம் படிப்பிக்க எனவும் கேட்டுக்கொண்டார்.