ஆரையூர் அருளின் பத்தாலய பாவாரங்கள் நூல் வெளியீடு

தேசிய கலைஞர் ஆரையூர் அருள் எழுதிய பத்தாலய பாவாரங்கள் நூல் வெளியீடு அண்மையில் ஆரையம்பதியில் நடைபெற்றது.

இந்நூலினை ஆரையம்பதி இந்து மன்றத்தினர் வெளியீடு செய்தனர். அறிமுக உரையை கிழக்கு பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறையின் விரிவுரையாளர் கலாநிதி த.மேகராசா நிகழ்த்தியதுடன், நயவுரையை சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கை நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மோகனதாசன் நிகழ்த்தியிருந்தார்.

குறித்த நூல் ஆசிரியர் பக்தி, பண்பாடு, கலை, இலக்கியம் பற்றி 10க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.