மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகர்களாக கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு இன்று(30) திங்கட்கிழமை மாகாணக்கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் முறையான ஆசிரியர் ஆலோசகர் நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தார்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்ச்சியில், கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் த.அனந்தரூபன், மட்டக்களப்பு மேற்கு பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான செ.மகேந்திரகுமார், த.யசோதரன், Y.S.சஜீவன், ந.குகதாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, 19பேருக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. ஆசிரிய ஆலோசகர் சேவை நிறுவப்பட்ட பின்னர் முறையான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சேவையில் தரம் 1, 2 ஆகிய தரங்களுக்கே குறித்த ஆசிரியர் ஆலோசகர்கள் உள்வாங்கப்பட்டு நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.