வாக்காளர் ஒருவருக்கு 15 ரூபாய் மட்டுமே செலவழிக்க முடியும் !

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் இன்று (24) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டனர்.

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்காளர் ஒருவர் சார்பாக 15 ரூபாயை மட்டுமே வேட்பாளர் செலவு செய்ய முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.