போலி கையொப்பத்துடன் வேட்புமனு தாக்கல் – தயாசிறி ஜயசேகர

தனது கையொப்பத்தை போலியாகப் பயன்படுத்தி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தெஹிவளை – கல்கிசை மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரின் கையொப்பத்தை போலியாகப் பயன்படுத்தி வேட்புமனுவைச் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.