யாழில் வீணையிலும், மட்டக்களப்பில் படகு சின்னத்திலும் போட்டியிடுகின்றோம் – பசில்!

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் வீணை சின்னத்திலும், மட்டக்களப்பில் படகு சின்னத்திலும் போட்டியிடுவதாக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று இன்று(செவ்வாய்கிழமை) வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 252 உள்ளூராட்சி சபைகளில் நேரடியாக மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலினை ஒத்திவைப்பதற்குரிய நடவடிக்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,

“நான் தற்போது ஆட்சியில் இல்லை. எனவே இதுகுறித்து நீங்கள் அரசாங்கத்திடமே கேட்க வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.