கடன் மறுசீரமைப்பு அடுத்த 6 மாதங்களில் நிறைவடையும் – நந்தலால் வீரசிங்க

அடுத்த 6 மாதங்களில் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் என நம்புவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை மீள செலுத்துவோம் என்றும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு இந்தியா ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ள நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.