மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக 9 ஆம் திகதி போராட்டத்திற்கு அழைப்பு!

அரசாங்கத்தின் பிழைப்புக்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து எதிர்வரும் 9 ஆம் திகதி போராட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த நாட்டில் செலவழிக்கப்படும் வரிப்பணத்தில் கிடைக்கும் நன்மைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னெஹெக்க தெரிவித்துள்ளார்.