யாழில் காணி விடுவிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்!

யாழ் மாவட்டத்தில் வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணிவிடுவிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ்மாவட்ட செயலக அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி செயலக, வனவள திணைக்கள அதிகாரிகளுக்குமிடையில் யாழ்மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

நேற்று பிற்பகல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன், வடக்குமான பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளி, மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், வனவள திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மறும் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் இணையவழியூடாக கொழும்பைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

வனவள தினைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணிகள் தொடர்பில் நாளையதினம் களவிஜயம் ஒன்றும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவுள்ளது.