தேர்தலுடன் அரசாங்கத்தின் தன்னிச்சையான பயணத்திற்கு முற்றுப்புள்ளி!

இவ்வருட உள்ளூராட்சித் தேர்தலுடன் அரசாங்கத்தின் தன்னிச்சையான பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து புரட்சிகரமான மாற்றம் ஆரம்பமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று கருத்து தெரிவித்த அவர், பொதுமக்களின் கருத்துக்கு முகம் கொடுக்க முடியாத அரசாங்கம் தேர்தலை தவிர்க்க பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தி இந்த ஆண்டு முந்நூற்று முப்பத்தாறு உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடவுள்ளதாகவும், அந்த அனைத்து சபைகளின் அதிகாரத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.