உள்ளூராட்சி சபைத் தேர்தல் – அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அழைப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களை கலந்துரையாடலுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இன்று(செவ்வாய்க்கிழமை) காலை இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் திகதியை அறிவித்த பிறகு அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணைக்குழு சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து இதன்போது அறிவிக்கப்படவுள்ளது.

தேர்தல் நடைமுறைகள் குறித்து ஆலோசிக்க ஆணைக்குழுவின் சிறப்புக் கூட்டமும் அடுத்த சில நாட்களில் நடைபெறவுள்ளது.