குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை மீள்நிர்மாணம் செய்துகொள்ள உதவினார்

(தலவாக்கலை பி.கேதீஸ்)

தலவாக்கலை மிடில்டன் தோட்ட லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை மீள்நிர்மாணம் செய்துகொள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் கட்டுமாண பொருட்களை வழங்கியுள்ளார். தீ விபத்தினால் சேதமடைந்த குடியிருப்புக்களை நேரில் சென்று பார்வையிட்ட அவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் அவர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். தொழிலாளர்களின் லயன் குடியிருப்புகளில் ஏற்படும் தீ விபத்துக்களின் போது அவர்களுக்கு காப்புறுதி நட்டஈடு பெற்றுக்கொடுக்கும் வகையில் உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.