இன்று சவுதி அரேபியாவுக் விஜயம் செய்கின்றார் அலி சப்ரி!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று சவுதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌதின் அழைப்பின் பேரில் அவர் விஜயம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (23) முதல் 27 ஆம் திகதி வரை சவூதி அரேபியாவில் தங்கியிருந்து, இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.