புதிய அமைச்சர்களை நியமிப்பது அநாவசியமான செலவு என்ற கருத்து நாட்டில் காணப்படுகின்றது – சஞ்சீவ எதிரிமான்ன!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் புதிய அமைச்சர்களை நியமிப்பது அநாவசியமான செலவு என்கிற கருத்து நாட்டில் காணப்படுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும்போது மின் வெட்டு அமல்ப்படுத்தக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவில் இருந்து எவரும் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்றே எதிர்பார்த்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அதிகளவான எண்ணிக்கையானோர் இம்முறை தங்களது கட்சி சார்பாக போட்டியிடுகிறார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.