(நூருல் ஹுதா உமர்)
அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இலக்கிய விழா மற்றும் பிரதேச கலைஞர் சுவதம் விருது வழங்கல் நிகழ்வு அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியால கேட்போர் கூடத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அகமது ஷாபிர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் அவர்களும்,
அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் மற்றும் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். றின்சான், சாய்ந்தமருது கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.சபிக்கா அவர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது சாய்ந்தமருது சார்பாக 04 பேர் சுவாதம் விருதுகளையும், மாவட்ட இலக்கிய போட்டியில் 07 பேர் பரிசில்களையும், சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.