ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு!

ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

எதிர்ப்புத் தெரிவிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் 20,000 வைத்தியர்களிடம் மனுவொன்றில் கையெழுத்து சேகரிக்கப்பட்டு வருவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி ஜனவரி 10ஆம் திகதி கையொப்பமிடப்பட்ட மனு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.