ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் தீவுக்காலை பிரதேசத்தில் பேருந்து தரிப்பிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்கு விடப்படவுள்ளது.
குறித்த பேருந்து தரிப்பிடமானது தீவுக்காலை, கோளாவில், சின்னப்பனங்காடு மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய கிராம மக்களின் நீண்டகால தேவையாக இருந்துவந்த நிலையிலேயே பிரதேச சபையினால் தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிறோஜாதரன் அவர்களின் ஆலோசனையில் 0.8 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விரைவில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.