அட்டன் கல்வி வலயம் அஸ்ஹர் இப்றாஹிம் நோர்வூட் தேசிய பாடசாலையில் கற்கும் மாணவர் ஒருவரால் பச்சை வீட்டை இணையம் மூலம் கண்காணிக்கும் IOT முறைமை உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசீலிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் கற்கும் எஸ்.கிரிஸான் என்ற மாணவரே குறித்த முறைமையை உருவாக்கி அதனை பச்சை இல்லத்தில் (Green House) பொருத்தியுள்ளார்.
இதன்மூலம் பச்சை இல்லத்தின் ஈரப்பதன், வெப்பநிலை மற்றும் அங்குள்ள தாவரத்தின் வளர்ச்சி ஆகியவற்றை தன்னியக்கமாக கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.