மின்கட்டணம் குறித்து பொதுமக்களிடம் அச்சம் ஏற்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மின்கட்டணம் உயர்த்தாவிட்டாலும் மின்வெட்டு என்று கூறுவது அநியாயம் என்றும் இவ்வாறு அச்சுறுத்துவது மக்களை கைது செய்வதற்கு சமம் என்றும் கூறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.