எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக பிரகடணம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில், பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான பிரதமர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) கிறிஸ்மஸ் தினம் கொண்டாடப்படும் நிலையில், மறுநாள் திங்கள் கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.