ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் இறைச்சிக்கடைகள் மீது தொடர்ச்சியாக 3 நாட்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பிரதேசத்தில் உள்ள உணவகங்களின் தரத்தைப்பேணும் வகையிலும் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி Dr எம்.எச்.எம்.தாரிக் அவர்கள் தலைமையில் குறித்த பரிசோதனை இடம்பெற்றது.
இதன் போது, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வழிகாட்டுதல்களைப் பேணாத பேக்கரி மற்றும் உணவகம் என்பன மூடப்பட்டது. அத்துடன், உரிய சுகாதார முறைகளை பின்பற்றாத உணவகங்களின் உணவு பரிமாறும் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.