அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படும் வெளிநாட்டு சேவை !

இலங்கைப் பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் செயற்பாடு அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக உயர் பதவியில் உள்ள வீட்டு பராமரிப்பு உதவியாளர்களை பணிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

இலங்கைப் பெண்களுக்கு வெளிநாட்டில் வீட்டுப் பணியாளர்களாக பணியாற்றுவதற்கு உயர்தரப் பயிற்சிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அதன்படி அடுத்த வருட ஆரம்பத்தில் இந்தப் பயிற்சி ஆரம்பிக்கப்படும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி தெரிவித்தார்.