பேராசிரியர் அதுல சேனாரத்ன தாக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை பொறுப்பேற்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பேராதனை பல்கலைகழக பேராசிரியரும் முன்னால் துணைவேந்தருமான அதுல சேனாரத்ன பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றினால் தாக்கப்பட்டமை தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது.
அதன்படி, குறித்த விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று முதல் முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.