கிண்ணியா தளவைத்தியசாலைக்கு ஒரு தொகை மருந்துப் பொருட்கள் கையளிப்பு

(ஹஸ்பர்)

கிண்ணியா தளவைத்தியசாலைக்கு ஒரு தொகை மருந்துப் பொருட்கள் இன்று (17) கையளிக்கப்பட்டன.

குறித்த மருந்துப் பொருட்களை சமூக தீர்மானத்திற்கான பெண்கள் அமைப்பின் ஸ்தாபகரும் அதன் தலைவியும்,ஐக்கிய தேசிய கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளருமான ரோஹினா மஹ்ரூப் வைத்தியசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக வைத்தியசாலையில் வைத்து வழங்கி வைத்தார்.

குறித்த மருந்துப் பொருட்களை கனடாவில் உள்ள சிவில் அமைப்புக்கள் ரோஹினா மஹ்ரூபின் வேண்டுகோளிற்கிணங்க இலங்கைக்கு வழங்கியுள்ளனர். தற்போது நாட்டில் பெரும்பாலும் மருந்துப் பொருட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனை நிவர்த்திக்கும் வகையில் ஒரு கோடி ரூபாவுக்கும் மேலதிகமான தொகை கொண்ட மருந்துப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளனர் .அதன் ஒரு பகுதியாக கிண்ணியா தளவைத்தியசாலைக்கு ஒரு தொகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர தோப்பூர், தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படவுள்ளன.

குறித்த நிகழ்வில் கிண்ணியா தள வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிமார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.