(கனகராசா சரவணன்)
நாட்டில் ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டு விவசாயத்தில் கைவைத்திருந்து மாத்திரமல்ல ஒட்டு மொத்தமாக மக்களின் பொருளாதாரத்தை இல்லாமல் செய்த பணியை அவர்களே ஆரம்பித்தனர். எனவே எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தற்சார்பு பொருளாதாரத்தை கட்டியொழுப்ப வேண்டியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் தெரிவித்தார்.
‘எமக்கான உணவை நாமே பயிரிடுவோம் வீட்டுத்தோட்டங்களை உருவாக்கும்’ செயற்திட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கனடா கிளையின் அனுசரணையுடன் நேற்று வெள்ளிக்கிழமை (16) அம்பாறை ஆலையடிவேம்பு தமிழ் சங்க மண்டபத்தில் 100 பேருக்கு கத்தரி ,மிளாகாய் மற்றும் தென்னம்கன்றுகளை வழங்கும் கலந்து கொண்டு அவற்றை வழங்கிவைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்களின் தேவைகளை அறிந்தவர்களாக இருந்தாலும் எங்களிடம் போதிய நிதி இல்லை அரசாங்கத்தால் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு ஓதுக்கப்படும் நிதி கூட 202 ம் ஆண்டு ஓதுக்கப்படவில்லை. இருந்தபோதும் புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்புடன் சின்னச் சின்ன உதவி திட்டத்தை மக்களுக்கு வழங்கி வருகின்றோம்.
நாட்டிலே ஏற்பட்ட பொருளாதார மற்றும் கொரோனா பிரச்சனை காரணமாக ஒட்டு மொத்தமான பொருளாதார வீழ்சி நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது இதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் புலம் பெயர் தேசத்திலுள்ள எங்கள் உறவுகள் எங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த உதவிகளை செய்துள்ளனர். எனவே முடிந்தவரை இதனை ஒரு வெற்றிகரமான செயற்திட்டமாக மாற்றியமைக்க வேண்டும. என்றார்
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் சச்சிதானந்தம், பிரத்தியோக செயலாளர் கண்ணதாசன், மற்றும் பிரதேச கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு இந்த பயிர் கன்றுகளை வழங்கிவைத்தனர்.