தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான மாதிரிப் பரீட்சை வினாத்தாள் கையளிப்பு!

மாணவர்களைப் பாடசாலைக்குத் தேர்ந்தெடுப்பதற்கும் மாணவர்களுக்கு உதவிப் பணம் வழங்குவதற்குவதற்குமாகத் தரம் ஐந்து மாணவர்களுக்கு 2022 இல் நடாத்தப்படும் பரீட்சைக்கான மாதிரிப் பரீட்சை வினாத்தாள்கள் சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் மூலம் பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன் போது அமைப்பின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் வி.மதிமேனன் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

கல்முனை கல்விக் கோட்டம், பட்டிருப்பு கல்வி வலயம், மட்டக்களப்பு கல்வி வலயம், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், கல்குடா கல்வி வலயம் மற்றும் ஈச்சிலம்பற்றுக் கல்விக் கோட்டப் பாடசாலைகளில் கற்கும் சுமார் 7600 மாணவர்களுக்கு சி.மூ.இராமாணிக்கம் மக்கள் அமைப்பின் மூலம் வழங்கப்பட்டது.

அத்துடன் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினர் பல்வேறு மக்கள் நலன்சார்ந்த விடயங்களுடன் கல்விக்காகவும் பல்வேறு செயற்றிட்டங்களை கடந்த 6 வருடங்களாக நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.