அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்!

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக மீராலெவ்வை முஹம்மது றியாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த ஏ.எல்.எம்.ஹம்ஸா கட்சியிலிந்தும், உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மீராலெவ்வை முஹம்மது றியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் மற்றும் சட்டத்தரணி அஷ்ஷேக் ஏ.எல்.எம்.காசிம் ஆகியோர் முன்னிலையில் அவர் பிரதேச சபை உறுப்பினராக சத்தியப் பிரமானம் செய்து கொண்டார்.