தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தின்போது, சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு பங்கேற்கவுள்ள நிலையில், அதில் பேசப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இதில் கரிசனை கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, கடந்த மத்திய குழு கூட்டத்தில் இம்மாதம் 18ஆம் திகதி திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது.
அத்தினத்தில் மாநாடு தாமதமடைவதற்கான காரணங்கள் பற்றி ஆராயப்படவுள்ளதோடு, மாநாட்டுக்கான புதிய திகதி முன்மொழியப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், கட்சியின் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் சம்பந்தமாக மத்திய குழுவின் அங்கீகாரத்திற்கு விடப்பட்டு, பொதுச்சபையின் அனுமதிக்காக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளது.