மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீரற்ற காலநிலை காரணமாக விலங்குகள் திடீரென மரணிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எனவே பொது சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.