(வி.சுகிர்தகுமார்)
பெண்கள் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான மாவட்ட செயல்முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ஜே.எம்.ஏ.டக்ளஸ் தலைமையில் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சுரேக்காவின் ஏற்பாட்டில் அம்பாறை மாட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இக்கூட்டத்திற்கு பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் ஆற்றுப்படுத்துனர்கள் அழைக்கப்பட்டு கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
நிகழ்வில்; அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் மற்றும் சுவாட் நிறுவனத்தின் தலைவர் வி.பரமசிங்கம் அவர்கள் கலந்துகொண்டு இணையம் மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பிலா கருத்துக்கள், தகவல்களை வழங்கிவைத்தார்.