பிரிட்டிஸ் கவுன்சிலின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கான நிகழ்வுகள்

(த.சுபேசன்)

யாழ்ப்பாணம் பிரிட்டிஸ் கவுன்சிலின் ஏற்பாட்டில் கடந்த முதலாம் திகதி சிறுவர்களுக்கான கதை கூறும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

ரக்கா வீதி நல்லூரில் அமைந்துள்ள பிரிட்டிஸ் கவுன்சில் வளாகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரிட்டிஸ் உயர் ஆணையாளர் வருகை தந்து நிகழ்வினை நடாத்தியிருந்தார். குறித்த நிகழ்வில் 5-10வயதிற்கு இடைப்பட்ட சிறார்கள் பலர் ஆர்வத்துடன் பங்குபற்றி பயனடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.