சமஷ்டி அடிப்படையிலான தீர்வே உண்மையான அபிவிருத்தி – சாணக்கியன்

பிளவுபடாத இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வே வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு உண்மையான மற்றும் சிறந்த அபிவிருத்தியை பெற்று கொடுக்கும் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அதிகார பகிர்வு தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்க நாடளாவிய ரீதியில் செயற்திட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஒருசில இனவாதிகள் அதிகார பகிர்வு தொடர்பாக தவறான நிலைப்பாட்டை சிங்கள மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளில் புறக்கணிப்புக்கள் காணப்படுகின்றன என்றும் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

ஆகவே பிளவுபடாத இலங்கைக்குள் அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரங்களை வழங்குமாறும் இரா.சாணக்கியன் கேட்டுக்கொண்டுள்ளார்.