100வீத சித்தியை பெற்று சாதித்த கற்சேனை பாடசாலை

(பெருநிலத்தான்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கற்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை முதன் முறையாக கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றி 100வீத சித்தியைப் பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் இருந்து 10மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அவ்வாறு தோற்றிய 10மாணவர்களும் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பாடசாலையின் அதிகூடிய பெறுபேறாக 6ஏ,வீ,2சீ பதிவாகியுள்ளது. இதனை எஸ்.சுகிர்தா என்ற மாணவி பெற்றுள்ளார்.