அதிகஸ்ட பாடசாலை மாணவன் சாதனை

(பெருநிலத்தான்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தில் கல்வி பயின்ற பு.ரிசாந்தன் என்ற மாணவன் 9ஏ சித்திகளைப் பெற்று வரலாற்று சாதனைப் புரிந்துள்ளார்.

குறித்த வலயத்திற்குட்பட்ட அதிகஸ்ட பாடசாலை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தரம் 1 தொடக்கம் 8வரை கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கற்று, பின்னர் தரம் 9 தொடக்கம் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரம் வரை காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தில் கற்கின்றார்.

குறித்த மாணவன் தேசிய ரீதியில் நடைபெற்ற சமூக விஞ்ஞானப்போட்டியிலும்; சாதித்திருந்தமை எடுத்துக்காட்டத்தக்கது.