(அ . அச்சுதன்)
ஐக்கிய அமெரிக்க தூதரக நிதி அனுசரணையில், சேர்விங் ஹியூமானிட்டி பவுன்டேசன், கிண்ணியா அமைப்பினரின் ஒருங்கமைப்பில் நேற்று (17 ) வியாழக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 சிவில் அமைப்புகளின் திறன் விருத்தியை மேம்படுத்தும் நோக்கில், அவர்களின் செயற்பாட்டு படிமுறை, நிருவாகக் கட்டமைப்பு, நிதிக்கையாளுகை தொடர்பான நெறியாளுகைக் கருத்தரங்கும், மூன்று மாதத்துக்கு முன் ஆரம்பமான நிகழ்வின் இறுதி நிகழ்வாக ஒவ்வொரு அமைப்புக்குமான சான்றிதள்களும் வழங்கப்பட்டடது.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருகோணமலை மாட்ட அரச அதிபர் B.H.N.ஜயவிக்ரம அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு,வளவாளராக
சி.சுஜீவனும்,மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கமைப்பாளர்
அத்தநாயக்க,நிறுவன தலைவர் ரஸீனா சாலே, நிறைவேற்று அதிகாரி
ஆஷிக் அலாப்தீனோடு, சமூக அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
அரசாங்க அதிபர் தனது சிறப்புரையில். நிகழ்வில் மூவின ஒருமைப்பாட்டை காணமுடிவதாகவும்இது இன நல்லுறவை வலுப்படுத்தி நாட்டின் சமாதான முன்னெடுப்புக்கு உதாரணமாக கொள்வதாகவும் தெரிவித்ததோடு, திருகோணமலை மாவட்டத்தில் 10,000 க்கு மேற்பட்டவர்களுக்கு மந்த போசாக்கு
இருப்பதாகவும், இது தொடர்பிலும் சிவில் அமைப்பினராகிய நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கருத்துரைத்திருந்தார்.