கடந்த சில மாதங்களாக நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் ஓரளவுக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பில் நம்பிக்கையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் அவர்கள் முன்வைத்த பொருளாதார சீர்திருத்தங்கள் முழுமையாக அமுலாகாது என்றும் அது வரையறுக்கப்பட்டதாக்க இருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களின் வாழ்க்கை முறையை மீண்டும் நெருக்கடியில் வீழ்த்தி விடாமல் இருக்க நாம் சிந்தித்து செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை மேல், வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலையிலும் பொருளாதார வலயங்கள் நிறுவப்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.