சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு!

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக தீர்க்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் சம்பளம், ஓய்வூதியம், பதவி உயர்வு நடைமுறைகள் மற்றும் நிரந்தர நியமனங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், அது தொடர்பான பல யோசனைகளும் முன்வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.