நூற்றாண்டில் கால்பதிக்கும் திருகோணமலை ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி

(ஹஸ்பர்)

நூற்றாண்டில் கால்பதிக்கும் திருகோணமலை ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் ஸ்தாபகரும் தம்பலகாமம் பட்டிமேட்டுக் கிராமத்தில் பிறந்த தங்கம்மா அம்மையார் அவர்களது நினைவாக நிலைபேறான பழ மரநடுகை தி/சாரதா வித்யாலயம் மற்றும் தி/ஆதிகோணேஸ்வரா வித்தியாலயத்தில் நேற்றயதினம் (22) இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஆதிகோணநாதர் ஆலயத்தில் அன்னையாருக்கான ஆராதனை இடம்பெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களும் சிறப்பு விருந்தினராக தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, திருகோணமலை ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் மற்றும் பிரதி அதிபர் உட்பட பலர் கலந்துகொண்ட இன்நிகழ்வினை இருபாடசாலைகளின் அதிபர்களும், கோயிலடி கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரும், ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின்பழைய மாணவிகளும் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.