திடீரென தீ பிடித்த வாகனம்-காங்கேசன்துறையில் சம்பவம்

மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் வான் ஒன்று தீயில் எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு பயணித்துக் கொண்டிருந்த வான் திடீரென தீப்பற்றிதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது சாரதி மட்டும் பயணித்ததோடு மின் ஒழுக்கு காரணமாக இவ் அனர்த்தம் இடம்பெற்று இருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.