திருமலை மீனவர்கள் பிரச்சினை அமைச்சர் டக்லசுடன் சந்திப்பு

(ஹஸ்பர்)

திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை நேற்று (19) அவரது அமைச்சில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் சந்தித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது மீனவர்களின் பக்க நியாயங்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அவர்கள் அதிகாரிகளுடன் கலந்துரையாடி விரைவில் சாதகமான முடிவினை அறிவிப்பதாக கூறினார்.

மேலும் திருகோணமலை மாவட்ட மீனவர்களுடன் கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்யுமாறும் அமைச்சர் அவர்கள் குறித்த பாராளுமன்ற உறுப்பினரிடம் வேண்டிக்கொண்டதுடன் அதில் தானும் கலந்துகொள்வதாகவும் கூறினார்.

இச் சந்திப்பில் கிண்ணியா மீனவர் மகா சங்க தலைவர் ஏக்கூப் பாயிஸ், பிரதேச மீனவர் சங்க பிரதிநிதிகள் பைரூஸ், ரமீல்,றிபாஸ், லசந்த ஆகியோருடன் பிரத்தியேக செயலாளர் சதாத் கரீம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.